2009 என் வாழ்நாளில் மகிழ்ச்சியான நாளாக இருந்தது, புலிகள் தவறானவர்கள் - முரளி🎦

 முத்தைய்யா முரளிதரனே

நீங்கள் மூளைசாளிதான்
நாங்கள் முட்டாள்கள்தான்

நீங்கள் கூறுகின்றீர்கள்
விக்கற்றை வீழ்த மூளை
வேண்டுமென்றும்
உங்களை விமர்சிப்பவர்கள்தான்
மூளை இல்லாதவர்களென்றும்
ஆம் நீங்கள் மூளைசாளிதான்
ஆம் நாங்கள் முட்டாள்கள்தான்
எங்கள் இனத்தில் இன்னும்
உங்களைப்போன்றோருக்கு முட்டுக்கொடுப்பவர்கள்
இருக்கும்வரை
நாங்கள் முட்டாள்கள்தான்.

நீங்கள் பார்த்துப் பார்த்து
வீசி எறிந்த பந்து
90 பாகையிலும் திரும்பும் என்றும்
900 விக்கட்டுகளையும் வீழ்த்தும் என்றும்
நாங்கள் நம்பினோம்
நம்மினத்தவறென்று
மகிழ்ச்சியில் பொங்கினோம்
நம்பிய நாங்கள் முட்டாள்கள்தான்.
ஆனால்...
நீங்கள் முட்டுக்கொடுத்த
மூளை உள்ள சிங்களம்
மூர்க்கத்தனமாய் எறிந்த குண்டில்
90 000 ஆயிரம் விதவைகள்
வாழ்வு தொலைந்து போனதை
நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா.........?
அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா..?
அப்படியென்றால்
நீங்கள் மூளைசாளிதான்
நாங்கள் முட்டாள்கள்தான்..
த.யாளன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.