சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை!

 திருகோணமலை – கிண்ணியா, சூரங்கள் பகுதியில், வீட்டொன்றின் கூரையைப் பிரித்து நுழைந்து, 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (14) தீர்ப்பளித்தார்.

2012ம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,200,000 ரூபாய் நட்டஈடாக வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் மேலதிகமாக 3 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், அரச செலவாக 3 குற்றச்சாட்டுக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் 75,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக 18 மாத கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இதேவேளை நீதிமன்றில் ஆஜராகாத குறித்த குற்றவாளியை கைது செய்ய பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.Blogger இயக்குவது.