மணல் ஏற்றிச் சென்ற சாரதி பலி!கொழும்பு, சினமன் கிராண்ட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் கட்டுமானப் பணிகளுக்காக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று நேற்று வடிகாலொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிப்பர் வாகனத்தை வடிகாலிலிருந்து வெளியேற்ற முயற்சிகளை முன்னெடுத்தபோது, வாகனத்தலிருந்து கீழே வீழ்ந்த அதன் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெல்மதுலை பகுதியைச் சேர்ந்த 64 வயதுயைட நபர் ஆவார்.

இது தொடர்பான விசாரணைகளை சினமன் கிராண்ட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Blogger இயக்குவது.