செஸ் வரியினால் மக்களுக்கு நன்மையுமில்லை - இராதாகிருஷ்ணன்!

 


தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியின் மூலம் அதிகமான இலாபம் பெறப்படுகின்ற போதிலும் அதன்மூலம் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் கொவிட் 19 உலகம் முழுவதும் உள்ளது. பெருந்தோட்டப் பகுதிகளிலும் இது பரவியுள்ளது. 123 குடும்பங்கள் நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. பெருந்தோட்டப் பகுதியையும் கவனித்து அவர்களுக்கும் நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Blogger இயக்குவது.