கேப்பாபிலவில் 224 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

 முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு தனிடைப்படுத்தல் முகாம்கள் காணப்படுகின்றன ஒன்று கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையம் மற்றது 59 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் நிலையம் காணப்படுகின்றது

என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவு விமானப்படைதள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 03.10.2020 அன்று 225 பேர் வெளிநாடுகளில் இருந்து விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் கொரோனா தனிமைப்படுத்தல் மருத்துவமனைக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏனையவர்கள் அனைவரிடமும் கட்டம் கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.