கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 23 பேர் பூரண குணமடைவு!

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  மேலும் 23 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை  3,380 பேர்  பூரண குணமடைந்துள்ளனர்.

அதன்படி வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து 10 பேரும் , தேசிய தொற்று நோயியல் நிலையத்தில் இருந்து 8 பேரும் , ஈரனாவிலா வைத்தியசாலையில் இருந்து 3 பேரும் , ஹம்பாந்தோட்ட  மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு வெளிநாட்டவர் என 23 பேர் முழுமையாக கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

 நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் 13 வெளிநாட்டவர் சுமார் 1777 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்ற நிலையில் , 452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுருக்கக் கூடும் என வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் நேற்றைய தினம் நாட்டில் புதிய 132 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5,170 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் தற்போதைய நிலவரத்தின் மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புகளை பேணிய  நபர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக அதிரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.