தமிழக்தில் கடந்த 24 மணி நேரத்தில் 730 போ் பலி!

 நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 730 க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா்.

புதிதாக 63,509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 730 போ் உயிரிழந்தனா்.

இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 110,586 ஆக அதிகரித்தது. உயிரிழப்போர் சதவீதம் 1.53 ஆக குறைந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக, 63,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 72,39,390 ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 74,632 போ் குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 6,301,928 அதிகரித்தது.

அதாவது, 87.05 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 826,876 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 11.42 சதவீதமாகும். ஆறாவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 9 இலட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 13 ஆம் திகதி வரை 90,090,122 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,145,015 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவோர், புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மற்றும் தினசரி உயிரிழப்பவா்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.