வடக்கில் 24,641 வெடிபொருட்கள் மீட்பு!

 


வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் ஸார்ப் நிறுவனம் இதுவரை 24,641 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டு நிதியுதவியில் 2016ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 ஒக்டோபர் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இவை மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் – அம்பகாமம், தச்சடம்பன் ஆகிய பகுதிகளிலும், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி, முகமாலை மற்றும் ஆணையிறவு ஆகிய இடங்களிலும் 1,471,912 பரப்பளவில் இவ் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியதாக குறிப்பிட்டுள்ளது.

Blogger இயக்குவது.