லெப். கேணல் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு!

 


தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ஆம் லெப் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.


இதன்போது, முதல் பெண் மாவீரர் மாலதியின் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்த நினைவுகூரல் நிகழ்வில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


இதேவேளை, பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களின் நெருக்கடிக்கு மத்தியில் தடை உத்தரவு ஏதுமின்றி இந்நிகழ்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.