கொழும்பு துறைமுகத்தில்  5 பணியாளர்களுக்கு கொரோனா !


 கொழும்பு துறைமுகத்தில் dockyard பணிபுரியும் இதுவரை 5 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்தார். இங்கு ஆரம்பத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள், என்றார். இந்த சம்பவம் மத்துகம பகுதியில் ஒரு பேருந்தில் இருந்து பதிவான கொரோனா தொற்று தொடர்பானது என இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தடைபடாது என்றும், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் துறைமுகத் தலைவருடன் பேசப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

Blogger இயக்குவது.