லெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களி​ன் நினைவு நாள் இன்றாகும்!

 பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.



20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது,

1.லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் - திருகோணமலை)

2.கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா - குருநகர், யாழ்ப்பாணம்)

3.லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்) (மார்க்கண்டேசர் விக்கினராசா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாள் பூநகரி கடலில் மூழ்கி,

லெப்டினன்ட் மன்மதன் (மதன்) (வேலுப்பிள்ளை செந்தில்குமார் - தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது விழுப்புண்டைந்து,

வீரவேங்கை சாந்தா (சின்னராஜா சிவரஞ்சினி - எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.