இலங்கையில் மேலும் 609 பேருக்கு தொற்று!

 


நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 609 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதேவேளை பேலியகொட மீன் சந்தைத் தொகுதியில் தொழில்புரிந்து வீடு சென்ற இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த சுமார் 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


அத்துடன் குறித்த நபர் கொழும்பிலிருந்து பொது போக்குவரத்து பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இதேவேளை , எம்பிலிப்பிட்டிய நகரில் அந்நபர் சென்று வந்த 42 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.