சஹ்ரான் மனைவி உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல்!

 


தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் காசினின் மனைவி உள்ளிட்ட 7 பேரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஏழு சந்தேக நபர்களையும் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இன்று முன்னதாக, ஈஸ்டர் சண்டே தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்திற்கு (பிசிஓஐ) வந்தார்.

இந்நிலையில், இன்றையதினம் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா காதியா முதல் முறையாக ஆஜராகியிருந்தார்.

நாளைய தினமும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.