‘உயர்ந்த பையன்’ குண்டு வெடித்துச் சிதறியது!

 


இரண்டாம் உலகப் போரில், ஜேர்மனி போர்க்கப்பலை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்று போலந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐயாயிரத்து 400 கிலோகிராம் எடைகொண்ட ‘உயர்ந்த பையன்’ எனப் பெயரிடப்பட்ட இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தபோது வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த வெடிகுண்டு, ஜேர்மனி-போலந்து எல்லையிலுள்ள ஸ்வினூஜ்ஸி நகரில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படும் பியஸ்ட் கால்வாயில் கடந்த ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.

ஸ்வினூஜ்லி நகரில் இயற்கை எரிவாயு முனையம் அமைந்துள்ள நிலையில், வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும்போது வெடித்துச் சிதறினால் மிகப்பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் என்பதால் கடற்படை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டனர்.

இந்நிலையில், மிகநீண்ட ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பின்னர், பியஸ்ட் கால்வாயில் வெடிகுண்டை நீருக்கடியில் செயலிழக்கச் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

இதனால், 2.5 கிலோமீற்றர் சுற்றளவுக்குப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, அங்கு வசித்த 750 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்த, வெடிகுண்டை பியஸ்ட் கால்வாய் நீரில் மூழ்கடித்து செயலிழக்கச் செய்யக் கடற்படை வீரர்கள் முயன்றபோது யாரும் எதிர்பாராத வகையில் வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. எனினும், இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தப்பியுள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின் போது, 1945ஆம் ஆண்டு பிரித்தானியாவின் றோயல் விமானப் படையினர், ஜேர்மனி போர்க்கப்பலான லுட்ஸோவை அழிக்கும் நோக்கத்தில், ஆறு மீற்றர் நீளம் கொண்ட ஐயாயிரத்து 400 கிலோகிராம் எடைகொண்ட மிகப்பெரிய வெடிகுண்டை வீசினர்.

இந்த வெடிகுண்டில் இரண்டாயிரத்து 400 கிலோகிராம் அளவுக்கு வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்ததுடன் இது மிகச்சிறிய அளவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.