ஊரடங்கு குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை தொடரும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு சட்டம் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களில் ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர் மினுவாங்கொட பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சீ.பீரிஸ் உடன் 071 8591617 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி தகவல் தெரிந்துகொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட, திவலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த துறைமுகத்தில் தொழில்புரிபவர்களை மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை தொழில் நடவடிக்கைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதேவேளை, மினுவங்கொடை, திவுலப்பிட்டிய பகுதிகளில் வசிக்கும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்ட நிலையில் நாடு முழுவதும் கொரோனா சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை