பிரான்ஸில் மீளவும் முடக்கம்!

 


பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரில் இரண்டு வார கால முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரில் கொரோனா வைரஸ் தொற்று அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை(06) முதல் இந்நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து இன்று(05) அறிவிக்கப்படும் எனவும் பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.