மன்னாரில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று!

 


மன்னாரில் தனிமைப்படுத்தலில் இருந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 210 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு ஐவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கே கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.