மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற தம்பதிகள் சுயதனிமைப்படுத்தலில்!
கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இரத்தினபுரி – இறக்குவான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தம்பதியினர் நேற்று தப்பியோடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கஹவத்த – வெல்லந்தர பகுதியைச் சேர்ந்த பெண் , கொரோனா சந்தேகத்தில் கடந்த 27ஆம் திகதி கஹவத்த தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது அவருடைய கணவரும் அங்கேயே அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் இறக்குவான வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தகவல் கூறாமல் இவ்விருவரும் தப்பிச்சென்று அட்டகலன்பன்ன பனாவல பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்கள் குறித்த தகவல்களை திரட்டியதோடு தப்பிச்சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை