பொலிஸாருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்!!

 


ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, பொலிஸாருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ரிஷாட்டை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும், ரிஷாட் பதியுதீனை இதுவரையில் பொலிஸார் கைது செய்யவில்லை.

இந்நிலையில், சட்டத்தை மலினப்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்படக்கூடாதென சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளையும், சட்டமா அதிபர் வழங்கும் அறிவுறுத்தல்களையும் பொலிஸார் மெத்தனமாக கருதி விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரிஷாட் கைது செய்யப்படாமை தொடர்பில் சட்டமா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவிற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொது மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் பொலிஸார் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தை மீறிச் செயற்படும் முன்னாள் அமைச்சருக்கும், அவருக்கு உதவுவோருக்கும் எதிராக சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சட்டமா அதிபர், பொலிஸாருக்கு கடுமையான தொனியில் பணிப்புரை விடுத்துள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.