இன்று புலமைப்பரிசிலில் -புதிய நடைமுறைகள்!

 


இந்த வருடத்துக்கான தரம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற இருக்கின்றது.

குறித்த பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது.

மேலும் இன்று காலை 9.00 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சையின் முதலாவது பகுதி மு.ப. 09.30 – 10.30 மணிவரையும் இரண்டாவது பகுதி  11.00 – 12.15 மணி வரையும் இடம்பெறும்.

இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை  வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோருக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.