விமான படைக்கு புதிய தளபதி நியமனம்!!
இலங்கையின் 18 ஆவது விமானப் படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய விமானப் படைத் தளபதியாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த 2019 மே மாதம் 29 ஆம் திகதி இலங்கையின் 17 ஆவது விமானப் படை தளபதியாக நியமிக்கப்பட்ட சுமங்கள டயஸ் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அப் பதவிக்கு சுதர்ஷன பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை 36 வருட சேவையை நிறைவுசெய்த ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இதன்போது தாய்நாட்டுக்காக செய்த பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, சுமங்கள டயஸ்ஸின் ஓய்வுகால வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை