திவுலபிடிய, மினுவங்கொடயில் உள்ள முப்படையினரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென அறிவிப்பு!!
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் உள்ள முப்படையினரையும் சேவைகளுக்குத் திரும்ப வேண்டாமென இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை