ரயில்களில் நாட்டின் மூன்று பகுதிகளில் பயணிக்க தடை!

 


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட ,பாணந்துறை,மொரட்டுவ மற்றும் ஹோமாகமவில் உள்ளவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை களனிவெளி மற்றும் கடலோரப் பாதைகளில் இயங்கும் ரயில் சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.

அதன்படி பாணந்துறை,ஹோமாகம,ஹோமாகம வைத்தியசாலை மற்றும் மாகும்புர உப ரயில் நிலையங்கள் உள்ளிட்ட களனிவெளி ரயில் பாதையில் மீகொடவிலிருந்து கொட்டாவ வரை ரயில் நிலையங்களை பயன்படுத்துபவர்களுக்கு ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

அத்துடன் வாதுவையிலிருந்து அங்குலானா ரயில் நிலையங்களுக்கு பின்வத்த, பாணந்துறை, எகட உயன, கொரலவெல்ல, மொரட்டுவ மற்றும் லுனவ உப ரயில் நிலையங்கள் உள்ளிட்ட கடலோர பாதையில் இயங்கும் ரயில்களை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.

இதேவேளை , க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.