மலையக பல்கலைக்கழகம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

 


மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று(புதன்கிழமை)  கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை தெரிவு செய்து, அவ்விடத்தினை உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கி, விரைவில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சின் செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி, பிரதமரின்  இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான்,   மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.