சமாதான நீதவான் ஒருவர் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டார்!!

 


வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பணியாற்றிய கூமாங்குளம் பகுதியில் வசித்து வரும் சமாதான நீதவான் ஒருவர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த சமாதான நீதவான், வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சமாதான நீதவானாக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் அவரிடம் ஒப்பம் பெற்றுக்கொள்வதற்காக கொரோனா நோய் தொற்றுக்குட்பட்டுள்ள தொற்றாளார் ஒருவர் வந்து சென்றுள்ளமை உறுதியானதை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.