இன்று உலக உளநல நாள்!

 


உள ஆரோக்கியமானது, நாம் மிகக் குறைவாக அக்கறை செலுத்துகின்ற ஒரு விடயமாக உள்ளது. ஆனால், இது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் மிகவும் அடிப்படையான ஒன்று என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தனிநபர்களின் உள ஆரோக்கியம் செவ்வனே பேணப்பட வேண்டியதன் அவசியத்தை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது. ஒரு தனிமனிதரின் மன நிலையானது - அவரின் தனிப்பட்ட, சமூக மற்றும் தொழில்சார் வாழ்வுகளில் அவர் ஒரு சமநிலையைப் பேணுவதற்குப் பங்களிப்புச் செய்கின்றது. 2020ஆம் ஆண்டுக்கான உலக உளநல தினத்தின் கருப்பொருள் - "அனைவருக்கும் உள ஆரோக்கியம்" என்பதாகும். உளநலத்திற்கான அங்கீகாரம், அது பற்றிய கல்வி மற்றும் விழிப்புணர்வு, மற்றும் உள ஆரோக்கியம் தொடர்பான தொழில்முறைச் சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டியது எமக்கு ஓர் இன்றியமையாத தேவையாகவும் கடமையாகவும் இருக்கின்றது. #கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.