பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!


 சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்ட்டுள்ளது.

நேற்றைய தினம் சமூகத்திலிருந்து பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் இருத்தல், வீடுகளை விட்டு வெளியேறும் போது முகக்கவசங்கள் அணிதல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.