இலங்கை வந்தது அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு!

 


எதிர்வரும் 28ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.


அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோஇந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.


அதன் பின்னர் , ஊடக சந்திப்பொன்றையும் அவர் கொழும்பில் நடத்தவிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தயார்படுத்தலை செய்வதற்காக அமெரிக்க உயரதிகாரிகள் குழுவொன்று நேற்று கொழும்பை வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.