பேங்கொக்கில் அவசரநிலை மீளபெறப்பட்டது!
பெரிய அளவிலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், கடுமையான அவசரநிலை திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்திற்கும் முடியாட்சிக்கும் எதிரான பல மாத போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் கோபத்தைத் தூண்டுவதற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை வீதிகளில் கொண்டுவருவதற்கும் மட்டுமே இது உதவியது. இந்த நிலையில், கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் பேங்கொக் கடுமையான அவசரநிலை திரும்பப்பெறப்பட்டது.
உத்தியோகபூர்வ ரோயல் வர்த்தமானி வெளியிடப்பட்ட ஒரு அரசாங்க அறிக்கையில், ‘மதியம் 12 மணி வரை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் அரசியல் கூட்டங்களுக்கு தடை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் செய்திகளை வெளியிடுவது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகள் முடிவுக்கு வரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு நாடாக இருந்த தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு மன்னரின் கைப்பாவையாக செயற்பட்ட இராணுவம் சதி செய்தி ஆட்சியைக் கவிழ்த்து நாட்டைக் கைப்பற்றியது.
இதனைத்தொடர்ந்து இராணுவத்தின் முன்னாள் தலைவர் பிரயுத் சான் ஒச்சா பிரதமர் ஆனார். பின்னர் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து தேர்தல் நடந்தது.
2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மாணவர்களின் ஆதரவு பெற்ற ‘ப்யூச்சர் பார்வர்ட்’ கட்சி தோல்வியைத் தழுவியது. மீண்டும் பிரதமர் பிரயுத் ஆனார். ஆனால், இதனை ஏற்க மறுத்த மாணவர் சமூகம், இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறியது.
2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ப்யூச்சர் பார்வர்ட் கட்சியே கலைக்கப்பட வேண்டும் எனச் சட்ட ரீதியாக அழுத்தங்கள் தரப்பட்டன. இப்போது நடைபெறும் போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி அப்போது நடந்த போராட்டங்கள்தான். கொரோனாவால் சில மாதங்கள் அந்தப் போராட்டங்கள் வீரியம் இழந்தன. இப்போது, பல மாதங்களாக அடக்கிவைக்கப்பட்ட மக்களின் கோபம் வெடித்து மாபெரும் மாணவர் போராட்டமாக மலர்ந்திருக்கிறது.
முடியாட்சியை மறு சீரமைப்பு செய்ய வேண்டும், மீண்டும் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களையும் மற்ற புரட்சியாளர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்பதே இப்போதைய கோரிக்கைகளாக உள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை