வர்த்தக நிலையமொன்றுக்கு பூட்டு!


 நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதன் பின்னர் ஹோமாகவில் அமைந்துள்ள வர்த்தக நிலைய வளாகமொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஹோமகாமா வர்த்தக நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இரண்டு மீன் கடைகளின் உரிமையாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர் மஹரகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று மீன் கொள்வனவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமன்றி இரண்டு மீன் கடைகளிலம் தொழில்புரியும் பல ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.