இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற சஞ்சிகைகள் மீட்பு!

 மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் “இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்றில் நடைபெற இருந்த ஆண்டு விழாவுக்காகவே இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.