மடுகந்தை விபத்தில் இருவர் சாவு!

 வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதி, மடுகந்தை பகுதியில் இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து கெப்பிட்டிகொல்லாவை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் குறித்த நபர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஒரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் முகமது மாகீர் (41-வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.Blogger இயக்குவது.