'இறக்குடா பிளைட்டை' - சூரரை போற்று டிரைலர்!!

 


சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இந்திய விமானப் படையிடம் இருந்து வரவேண்டிய தடையில்லா சான்றிதழ் தாமதமாக வந்ததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியதோடு நவம்பர் 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி என்ற நிலையில் தீபாவளி விருந்தாக இந்தப் படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சற்று முன் வெளியான ட்ரெய்லரில் சூரரைப்போற்று படத்தின் அசத்தலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏரோட்டுறங்களும் ஏரோப்ளேனில போவான்’ என்ற சூர்யாவின் வசனம் உள்பட டிரைலரில் உள்ள அனைத்து வசனங்களும் அட்டகாசமாக உள்ளது.



சாதாரண குடிமகன் ஒருவர் விமான நிறுவனம் ஆரம்பித்து ஒரு ரூபாய்க்கு மக்களை பறக்க வைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா? அல்லது அந்த கனவை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் தொழிலதிபர்களின் சதி நிறைவேறுகிறதா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.


சுதாகொங்கராவின் மனதில் தோன்றிய காட்சி அமைப்புகள் அப்படியே திரையில் தோன்றும் வகையில் படமாக்கியிருப்பது நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் வித்தியாசமான இருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது.


சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு மற்றும் ஆச்சரியப்படும் வகையிலான காட்சி அமைப்புகள் இந்த ட்ரெய்லரில் இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


’வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா? பிளைட்டை இறக்கிடா நான் பாத்துக்குறேன் போன்ற உணர்ச்சி மிகுந்த வசனங்கள் படத்தின் பிளஸ் பாயிண்டாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.