தப்பியோட பார்த்த வெலிக்கடை சிறைக்கைதிகள்!



வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரத்தை உருவாக்கி கைதிகள் சிலர் தப்பிச் செல்ல திட்டமிட்ட விபரத்தை சிறைச்சாலைகள் திணைக்கள உளவுப்பிரிவு கண்டறிந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறைச்சாலையின் செப்பல் வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திக என்ற கைதி இந்த சதித்திட்டத்தின் சூத்திரதாரி என்றும், அசங்க, ரோஷன், கல்லேஜ் மற்றும் சாகர போன்ற கைதிகளின் குழுவும் இந்த சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதுதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

சிறைக்கைதிகளிற்கு ஒரு வகை மருந்தை கொடுத்து மயக்கமடைய செய்வதன் மூலம், கலவரத்தை உருவாக்குவதே இந்த குழுவின் திட்டம்.

வெலிகடை சிறையில் 4049 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். செப்பல் பிரிவில் மட்டும் 2400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அபாயத்தையடுத்து, சிறைக்கைதிகளை பார்வையிடும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறைச்சாலைக்கு வெளியில் குற்றவியல் வலையமைப்பை இயக்கும் கைதிகள் பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும், அவர்களே, கலவரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

கலவர தகவல் சிறைச்சாலை திணைக்களத்திற்கு தெரிய வந்ததையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.