கைது செய்யப்படுவதற்கு தடை கோரி ரிஷாட் ரீட் மனுத்தாக்கல்!!

 


தன்னை கைதுசெய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ரீட் மனுவொன்றை தாக்கல்செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று(வியாழக்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் சிலவற்றை நியமித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனினும் அவர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் கணக்காளர் அழகரத்தினம் மனோரஞ்சன் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Blogger இயக்குவது.