சூம் அப்பில் தாலி கட்டிய மாப்பிள்ளை!
யாழ்ப்பாணத்திலுள்ள யுவதிக்கும், டென்மார்க்கிலுள்ள புலம்பெயர் தமிழ் இளைஞருக்கும் நேற்று (29) சூம் செயலியில் திருமணம் இடம்பெற்றது.
உரும்பிராய் பகுதியில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
உரும்பிராயை சேர்ந்த யுவதியொருவருக்கு இந்த வருட ஆரம்பத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நிச்சயிக்கப்பட்டது. டென்மார்க்கில் வதியும் ஊரெழுவை சேர்ந்த இளைஞன் ஒருவரே மணமகன்.
எனினும், கொரோனா லொக்டவுண் காரணமாக மணமகன் இலங்கைக்கு வருவதில் சிரமமிருந்தது. கொரோனா முடிவற்று நீண்டு வரும் நிலையில், பல மாதங்களாக திருமணம் தள்ளிப் போய்கொண்டிருந்தது.
வருட இறுதியில் இலங்கை நிலவரம் சுமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாகி மீண்டும் நிலைமை மோசமாகியுள்ளது.
யுவதியின் சாதகப்படி இந்த வருட இறுதிக்குள் திருமணம் செய்ய வேண்டுமென யுவதியின் பெற்றோர் அழுங்குப்பிடி பிடித்ததையடுத்து, சூம் தொழில்நுட்பத்தில் தற்போது தாலி கட்டிக் கொள்வதென்றும், அடுத்த ஆண்டில் பதிவுத்திருமணம் செய்து கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டு, நேற்று இந்த நிகழ்வு நடந்தது.
இதன்படி சூம் தொழில்நுட்பத்தில் யுவதிக்கு, டென்மார்க் மாப்பிள்ளை தாலி கட்டினார்.
கருத்துகள் இல்லை