இதை படித்த பின்னர் வாழைப்பழ தோலை தூக்கிப் போட மாட்டீங்க!

 வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது என நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அதன் தோலின் பலன்களை பற்றி தெரியுமா?

  • கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால் வலி உயிர் போகும், அப்போது வாழைப்பழத் தோலை கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தை தடவிய பின்னர் அந்த இடத்தை சுற்றி மெல்ல அழுத்தம் கொடுத்தால் முள் வெளியே வந்துவிடும்.
  • சொரியாஸிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத் தோலினை தேயுங்கள், இதனால் எரிச்சல் நின்று சருமம் இயல்பு நிலைக்கும் திரும்பும்.
  • இதேபோன்று சிறு பூச்சி கடித்தால் அல்லது வேறு பிரச்சனைகளால் சருமத்தடிப்பு இருந்தாலும் வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.
  • மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலினை துணியினால் கட்டி இரவு முழுவதும் வைத்திருங்கள், இப்படியே செய்து வந்தால் மருக்கள் மறைந்துவிடும்.
  • முகப்பரு உள்ள இடத்திலும் வாழைப்பழத் தோலை கொண்டு தேய்த்து வந்தால் சருமத் துவாரங்கள் அடைபடும், இதனால் முகப்பருக்கள் குறைந்து தழும்புகள் மறையும்.
  • மஞ்சள் கறைபடித்த பற்கள் மீது வாழைப்பழத் தோல் கொண்டு தேய்த்தால் வெண்மையாகும், தினமும் காலையிலும், இரவிலும் பற்களை விளக்கிய பின் இதை செய்து வந்தால் பலனை பெறலாம்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.