படை பலத்தை அதிகரிக்கும் சீனா - தாய்வானுக்கு அச்சுறுத்தலா!!

 


தாய்லாந்தை தனது பிராந்தியம் என சொந்த கொண்டாட முனையும் சீனா, தென்கிழக்கு கடற்கரையில் படை பலத்தை அதிகரித்து வருவதாக, சீன இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை தாய்வான் மீது போர் தொடுக்கும் என சீனாவின் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்குமா என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அண்மையில் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், ‘போருக்கான தயார் நிலையில் மனதையும் உடலையும் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் விழிப்புடன் இருங்கள். முழு விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருங்கள்’ என இராணுவத்தினரிடம் கூறினார்.

இந்தநிலையில், தாய்வான் மற்றும் கொவிட்-19 விவகாரத்தில் சீனா – அமெரிக்கா இடையே ஏற்கெனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனாவின் இந்த ஆயுதக் குவிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் தாய்வானை சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 18, 19ஆம் ஆகிய திகதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தாய்வான் இடையிலான எல்லையை கடந்துள்ளன. அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் கூறினார்.

சீனாவில் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தாய்வான் உருவானது. என்றாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கூறி வருகிறது. தேவைப்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.