யாழில் வீதியில் சென்ற வயோதிப பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

 யாழ். உடுவில் பகுதியில் வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 4 பவுண் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் நேற்று மாலை வீதியால் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

ஆட்கள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து குறித்த வயோதிப பெண்ணை தாக்கி அவரிடமிருந்து 4 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.