வரும் வருடம் முதல் பாடசாலை வகுப்பறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

 எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் வகுப்பொன்றில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 45 ஆக மட்டுப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகளை முக்னெடுப்பதற்காக முன்மொழிவை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸால் இந்த திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Blogger இயக்குவது.