கிழக்கு பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

 


கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய மட்டக்களப்பில் 11 பேருக்கும் கல்முனை மற்றும்  பொத்துவில் பகுதியில் 9பேருக்கும் திருகோணமலையில் 5பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்பு- கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று  (சனிக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள்  ஊடாக திருகோணமலை, பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீதிகளில் செல்வதை தவிர்ப்பதுடன், இவர்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் இருப்பின், பொதுமக்கள் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவித்து இந்த தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.