அவளழளகு - கவிதை !!
சின்னநிலாப் போல நெற்றிப்பொட்டு -அவள்
சிங்காரித்து வந்தரோசா மொட்டு
வண்ணமயில் அவளழகை
வர்ணிக்கச் சொல்தேடி
கன்னியவள் மடிமீது விழுந்தேன் -நான்
கம்பனாக இப்போது எழுந்தேன்!
கொடி இடையை என்மனமும் ரசிக்கும் -அது
கோடை கால இளநீராய் ருசிக்கும்
நடையழகும் உடையழகும்
நடுவிலிருக்கும் இடையழகும்
படைதிரட்டி வந்தென்னைத் தாக்கும் - மனப்
பைக்குள்ளே காதல் பூக்கும்!
நாவசைத்தால் செந்தமிழும் இனிக்கும்
- அவள்
நாணம்தான் என்சூட்டைத் தணிக்கும்
பாவையவள் எனக்குள்ளே
பாரமின்றி விழுந்துவிட்டாள்
நாவில்விழுந்த மலைத்தேனின் சொட்டாய் -அவள்
நான்சுவைக்கும் ஆரஞ்சு மிட்டாய்!
வெட்டருவா போலிருக்கும் புருவம் - அவள்
விழியாலே வீழ்த்துகின்ற பருவம்
மொட்டவிழ்ந்து பூவாகி
முகம் மலர்ந்து வந்தவளின்
கட்டழகில் இருக்கிறது சொர்க்கம் - அவள்
கண்ணசைவில் இப்புவியும் நிற்கும்!
"""""'""'""""''’"''""
க. சித்தார்த்தன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை