வைத்தியரின் குடும்பத்திற்கு கொரோனா!

 


கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரியும் மூன்று பெண் மருத்துவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்தார்.

மருத்துவர்களில் ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

மேலும், மருத்துவரின் மகன், மகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.