சட்டவிரோதமான குடியிருப்புக்களில் வாழ்பவர்களுக்கு சொந்தவீடு!

 களனி புகையிரத பாதையின் இரு மருங்கிலும் சட்டவிரோதமான குடியிருப்புக்களில் வாழ்ந்தவர்களுக்கு  பாதுகாப்பான இடத்தில் சொந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  புகையிரத திணைக்களத்துக்குரிய  புகையிரத  வனப்பாதுகாப்பு  பிரதேசங்களில் வாழும் புகையிரத பணியாளர்கள் தொடர்பாக  நடவடிக்கைகளை முன்னெடுக்க  நால்வர் அடங்கிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

 புகையிரத திணைக்களத்துக்குரிய  14,000  ஏக்கர்  வனப்பாதுகாப்பு  பிரதேச நிலப்பரப்பு  உள்ளன. இதில் 10 சதவீதமான காணிகள் பல  தரப்பினருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கபபட்டுள்ளன. எஞ்சிய காணியின் 80சதவீதம்  பல தரப்பினரால்   சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அவர்களில் புகையிரத திணைக்கள ஊழியர்களும், ஒய்வுப்பெற்ற  ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர். வீடமைப்பு மற்றும்   வர்த்தக நிலையங்களை அமைத்தல் , விவசாய மற்றும்   இதர  தேவைகளுக்கு  சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துகின்றனர்.

 சட்டவிரோதமாக குறித்த  காணிகளை கையகப்படுத்தியுள்ள  சில  புகையிரத திணைக்கள  ஊழியர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன்,   ஒழுக்காற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு ஓய்வூதியமும்  இரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த விடயங்களை  ஆராய்ந்து   அறிக்கை  சமர்ப்பிக்க   போக்குரவத்து தலைவர் காமினி லொகுகே  தலைமையில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் ஜனக தென்னகோன்,  காணி விவகார அமைச்சர்  எஸ்.எம். சந்ரசேன,  நிதி மற்றும மூலதன  சந்தை   இராஜாங்க அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.