கணவனை விட்டு வேறு ஊருக்கு சென்ற மனைவி – மனைவியை தேடி வெட்டி கொன்ற கணவன்

 தமிழகத்தில் ஓராண்டுக்கு பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்த நபரை ஒருவர் வெட்டி கொன்ற சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் கோபி (38). கார் ஓட்டுனர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பவருடைய மனைவி ரமணிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிச் சென்றனர்.

ரமணியை கோபி பெங்களூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த சரவணனுக்கு அவமானம் ஏற்பட்டதோடு குடும்பத்தில் பல பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியை அழைத்துச் சென்றதால் கோபி மீது சரவணன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கு பழி வாங்க சரவணன் காத்திருந்தார்.

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் துக்கநிகழ்ச்சிக்காக கோபி நேற்று முன்தினம் வேலூர் வந்தார். இதையறிந்த சரவணன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

அம்மணாங்குட்டை பகுதியில் கோபி நின்றிருந்தபோது அங்கு வந்த ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கோபியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சரவணன் மனைவி ரமணிக்கும், கோபிக்கும் தொடர்பு ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை எழுந்தது. பின்னர் கோபி, ரமணியை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்றார்.

துக்க நிகழ்ச்சிக்கு கோபி வேலூர் வந்திருந்தபோது ஓராண்டு காத்திருந்த சரவணன் அவரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சரவணனுக்கு 2 பேர் உதவியாக இருந்தது தெரியவருகிறது.

மூவரையும் வலைவீசி தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்Blogger இயக்குவது.