தலவாக்கலை, லிந்துலை நகர வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

 இன்று காலை 10.00 மணியிலிருந்து தலவாக்கலை – லிந்துலை நகரசபை நிருவாகத்திற்கு உட்பட்ட நகரங்களில் காணப்படும் வர்த்தகநிலைய உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் தமது வர்த்தக நிலையங்களுக்கு வெளிப்பிரதேசத்தில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரும் நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ தத்தமது கட்டிடங்களை குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ விடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இது உடன் அமுலுக்கு வரும் எனவும் தலவாக்கலை – லிந்துலை நகரபிதா கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழமைப்போல் வழங்க திட்டமிட்டிருந்த நடைப்பாதை வியாபார நடவடிக்கைகள்; இவ்வருடம் நிறுத்தப்படவுள்ளதாகவும் நகரபிதா தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வருடம் தலவாக்கலை – லிந்துலை நகரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித நடைப்பாதை வியாபாரங்களையும் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஏகமனதான தீர்வினை நகரசபை எடுத்துள்ளதாகவும் நகரபிதா மேலும் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.