கொரோனா பரவல் குறித்த தகவலை வெளியிட்டார் சவேந்திர சில்வா!

 நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய சில தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மினுவங்கொட கொவிட் கொத்தணியின் முதலாவது முதல் இரண்டாவது தொற்றாளர் வரையில் பரவிய விதம் தொடர்பில் கண்காணிக்கப்பட்டதாகவும்,
நேற்றை தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 26 பேர் மினுவங்கொட பகுதியையும், 23 பேர் கம்பஹா பகுதியையும் மற்றும் 22 பேர் திவுலுபிட்டிய பகுதியையும் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் இருவர், மாத்தளையில் ஒருவர், பொலன்னறுவையில் இருவர் மற்றும் பாணந்துறையில் ஒருவர் என பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்தது ஒருவரேனும் இனங்காணப்பட்டுள்ளதால், மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்,

அத்தோடு, ஒருவரிலிருந்து 522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் எனவும் வைரஸ் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நடந்து கொள்ளும் விதத்திலேயே வைரஸ் சமூகமயப்படுவது தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது கொரோனா தொற்றாளர் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் தற்போதைய தகவல்களுக்கு அமைய கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் இருந்து சிலர் சுகவீனமுற்று இருந்ததாக தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.Blogger இயக்குவது.