பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் - நடால், தியேம், சிமோனா, ஸ்விடோலினா இரண்டாவது சுற்றில் வெற்றி!!
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில், ரபேல் நடால், டோமினிக் தியேம், அலெக்ஸன்டர் ஸ்வெரவ், ஸ்டென் வவ்ரிங்கா, சிமோனா ஹெலப், எலினா ஸ்விடோலினா, கிகி பெர்டன்ஸ் ஆகியோர் இரண்டாவது சுற்றில் வெற்றிபெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், அமெரிக்காவின் மெக்கென்சி மெக்டோனால்ட்டை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-1, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸன்டர் ஸ்வெரவ், பிரான்ஸின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸன்டர் ஸ்வெரவ், 2-6, 6-4, 7-6, 4-6, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ஒஸ்திரியாவின் டோமினிக் தியேம், அமெரிக்காவின் ஜெக் சோக்கை எதிர்த்து விளையாடினார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், 6-1, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் டோமினிக் தியேம், வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வவ்ரிங்கா, ஜேர்மனியின் டொமினிக் கோய்பெருடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இப்போட்டியில், ஸ்டென் வவ்ரிங்கா, 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், சகநாட்டு வீராங்கனையான இரினா-கேமிலியா பெகுவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சிமோனா ஹெலப், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ், இத்தாலியின் சாரா எர்ரானியை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், கிகி பெர்டன்ஸ், 7-6, 3-6, 9-7 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியொன்றில், உக்ரேனின் எலினா ஸ்விடோலினா, மெக்ஸிகோவின் ரெனாட்டா ஸராசியாயை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் எலினா ஸ்விடோலினா, 6-3, 0-6, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை