கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

 தென்மராட்சி – வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தின் கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் நேற்று (09) கிணறு துப்பரவு செய்யப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அறிந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து அக்கிணற்றில் இருந்து நேற்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

12 மோட்டார் குண்டுகளும் ஒரு கைக்குண்டும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Blogger இயக்குவது.