மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

 


இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கிடையில் மூன்று வைத்தியர்கள் உள்ளடங்குளவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கேகாலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளனதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 1,307 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களுள் 1036 பேர் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24,878 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும்

அதனடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 5000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள சில பொலிஸ் எல்லை பிரிவுகளில்

நாளை அல்லது நாளை மறுதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.